SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி.20 போட்டி 35 ரன் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி

2022-07-04@ 17:34:23

ரோசோ : வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இதில் முதலில் நடந்த 2 டெஸ்ட்டிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி நேற்று ரோசோ நகரில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இ்ண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் குவித்தது. ரோவ்மேன் பவல் நாட்அவுட்டாக 28 பந்தில் 2 பவுண்டரி,6 சிக்சருடன் 61 ரன் அடித்தார்.

பிராண்டன் கிங் 57, கேப்டன் நிக்கோலஸ் பூரன் 34 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல்ஹசன் நாட்அவுட்டாக 68 (52 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹொசைன் 34 ரன் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் அவுட்ஆகினர். 20 ஓவரில் வங்கதேச அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 35 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. ரோவ்மேன் பவல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.  3வது மற்றும் கடைசி போட்டி வரும் 7ம் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்