SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியின் பொதுக்குழுவுக்குள் செட்டிலாக நினைக்கும் நிர்வாகிகளின் தந்திரத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-07-04@ 00:55:04

‘‘இலை கட்சியின் பொதுக் குழுவுக்கு முன்பாக வீடு, கார் வாங்கவும், லைபபில் செட்டில் ஆகவும் யாரு நினைக்கிறா...’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் தலைமை பதவியை பிடிக்க ரெண்டு தலைகளும் கடும் குஸ்தியில் ஈடுபட்டிருக்காங்க. கட்சியின் பொதுக்குழுவுல மாங்கனி மாஜி ஆதரவாளர்களின் கையே ஓங்கி இருக்குதாம். இதுல புதுச்சேரி மாநில அழகான நிர்வாகி, மேடை பக்கம் வந்து ஆடிய ஆட்டத்திற்கு பிறகு தான் ஒழிக கோஷம் அதிகரிச்சதாம். ஆனா அவர், கரன்சிய வாங்கிக்கிட்டு யாருக்கும் கொடுக்காம பதுக்கிக்கிட்டதா இன்னொரு பலம் கொண்ட நிர்வாகி புதுகுண்டை வீசியிருக்காரு. அப்படி பார்த்தா ஊரெல்லாம் கரன்சி தண்ணீரா பாய்ஞ்சிருக்கு.
ஆனா இந்த மாங்கனி மாவட்டத்துல மட்டும், ஏன் அந்த காந்தி நோட்ட எங்க கண்ணுல காட்டலன்னு பொதுக்குழு நிர்வாகிகள் கேள்வி எழுப்பி திணறிடித்து விட்டார்களாம். மாங்கனி நகருக்கு வந்தாலும் கோஷம், சென்றாலும் கோஷம் போடுறோம். நாங்க என்ன பாவம் செஞ்சோம், எங்களை ஏன் கவனிக்கலன்னு ஒருவருக்கொருவர் பேசிக்கிறாங்களாம். புறநகருல 60 பேரும், மாநகருல 19 பேரும் இருக்கோம். அப்படின்னா எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கரன்சி யாருக்கிட்ட இருக்கு.. அடுத்த பொதுக்குழுவுக்குள்ள அதனை வாங்கியே தீரணும்... பொதுக்குழு முடிந்த பிறகு நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க... அதுக்கு முன்னாடி கரன்சியை பிடுங்கி கார், வீடுனு வாங்கிடனும். இப்போதுதான் நாலு காசு சேர்க்க முடியும் இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியம் கிடையாது. கரன்சி கொடுத்தால் வானகரம் வருகிறோம். அதுவும் 7க்குள் கரன்சி வரணும்... இல்லை என்றால் கட்சி மாறி வேறு ஒருவரின் தயவால எங்களை வீடு, காரு வாங்கும் நிலைக்கு தள்ளிடாதீங்க என்று பொதுக்குழு உறுப்பினர்கள் வார்னிங் தந்திருக்காங்களாம்... அரசியல்ல வரும்போதே அனுபவிக்கனும்.. இல்லாவிட்டால்  கட்டிய துண்டோட அரசியல் நடத்தணும்... எங்களுக்கு கட்டிய துண்டோட அரசியல் நடத்த ஆர்வம் இல்ல. கரன்சி ெகாண்டுவாங்க என்று தங்களை தேடி வரும் தலைவர்களை திருப்பி அனுப்புகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தர்மயுத்தகாரர் ஏன் யுடர்ன் அடிக்கிறார்... முதல்ல எதிர்ப்பு தெரிவித்தவர் இப்போது குனிந்து போக என்ன காரணம் சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஒற்றைத் தலைமை பிரச்னையால், இலைக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் என்ன செய்வதென்று திகைப்பில் உள்ளனர். வரும் 11ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என சேலம்காரர் அறிவிப்பால், அதிர்ச்சியடைந்த தேனிகாரர், நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனிடையே, இவரது தரப்பினர் தங்கள் ஆதரவாளர்களின் லிஸ்ட்டை எடுத்து அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரி வருகிறார்களாம். ஆனால், அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல, ‘பாத்துக்கலாம்ணே’ என்று ஒரே பதிலைச் சொல்லி ஜகா வாங்குகிறார்களாம். கடந்த நான்கு ஆண்டுகளில் கட்சி விரோத நடவடிக்கையாக கட்டம் கட்டப்பட்டவர்கள், கட்சித் தலைமையால் ஓரம்கட்டப்பட்டவர்கள், செல்வாக்கு இல்லாத அடுத்தகட்ட பிரமுகர்களை கூட விட்டு வைக்காமல் பேசி வருகிறார்களாம். ஆனாலும், ரெஸ்பான்ஸ் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து, தான் சார்ந்து இருக்கும் சமூகரீதியான ஆதரவை பெற பல வழிமுறைகளை கையாண்டார். ஆனால், ‘ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ஒன்றும் செய்யாமல் இப்போது, ஆதரவு கேட்டு வந்தால் எப்படி’ என்று ஒதுங்குகிறார்களாம். இதனால், சேலம்காரரை எதிர்கொள்ளமுடியாமல், தேனிகாரர் தவித்து வருகிறார். சேலத்துக்காரரை எதிர்க்க வேண்டும் என்றால், வரும் 11ம் தேதிக்குப்பின் பகிரங்கமாக சின்ன மம்மிக்கு ஆதரவு தெரிவிப்பது. அல்லது குக்கருடன் கைகோர்த்து, எதிர்ப்பது என்று தேனிக்காரரின் 2ம் கட்ட தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இந்த விஷயத்திலும் தர்மயுத்தகாரர் மவுனம் சாதிக்கிறாராம்... பதில் சொல்ல மறுக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொந்த ஊரிலேயே இறங்கி அடித்த தேனிக்காரரின் ஆதரவாளர்களால் அலறி போயி இருக்கும் சேலம்காரர் பற்றி சொல்லுங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில முக்கிய பதவியை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருவது ஊரறிந்த விஷயம். அதுல மாங்கனி விவிஐபிக்கு 98 சதவீதம் ஆதரவு இருக்காம். மாங்கனி மாவட்டத்தல உள்ள இலை கட்சி நிர்வாகிகள் விவிஐபிக்கு ஆதரவா போஸ்டர் ஒட்டி வைச்சுருக்காங்க. ஆனா மாங்கனி விவிஐபிக்கு எதிரா, அவரது சொந்த ஊரிலேயே தேனி விவிஐபிக்கு ஆதரவாகவும் போஸ்டர் ஒட்டிருக்காங்க. இது மாங்கனி விவிஐபிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்காம். நம்ம ஊருலேயே நமக்கு எதிரா போஸ்டர் ஒட்டற அளவுக்கு தில் இருக்கான்னு கேள்விமேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காங்களாம். மேலும் தேனி விவிஐபிக்கு ஆதரவா போஸ்டர் ஒட்டிய நபரை வலை வீசி தேடியும் வர்றாங்களாம். இதற்கிடையே சேலம் விவிஐபியின் சொந்த ஊரில் ஒட்டப்பட்ட தங்களுக்கு எதிரான போஸ்டர் எல்லாத்தையும் ஆதரவாளர்கள் கிழிச்சு எறிஞ்சிட்டாங்களாம். அடுத்தக்கட்டமா இன்னும் யாராச்சும் மாங்கனி விவிஐபிக்கு எதிரா இருக்காங்களான்னு தேடி கண்டுபிடிச்சு பணத்தால அடிக்கவும் முடிவு பண்ணியிருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்