சொத்து வரி செலுத்த சிறப்பு ஏற்பாடு: மாநகராட்சி தகவல்
2022-07-03@ 00:58:12

சென்னை: சென்னையில் சொத்து வரி செலுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சொத்து உரிமையாளர்கள் விரைவில் வரியை செலுத்தலாம், என வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்-53, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 30.3.2022ன்படி, சென்னை மாநகராட்சியின் முந்தைய பகுதிகள், இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்து வரி உயர்வாக உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டவைகளுக்கு, அவற்றிற்கு அருகாமையில் உள்ள முந்தைய மாநகராட்சி பகுதிகளைவிட சொத்து வரி அடிப்படை தெரு கட்டணம் அதிகமாக இல்லாதவாறு நிர்ணயம் செய்ய, மன்றத்தின் அனுமதி பெறப்பட்டு, சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுசீராய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு சார்வு செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரி பொது சீராய்வு அறிவிப்புகளில், முந்தைய சொத்து வரி மற்றும் பொது சீராய்வின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்து வரி ஆகிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பொது சீராய்வின்படி சொத்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியினை சொத்து உரிமையாளர்கள் எளிதாக செலுத்தும் வகையில், சீராய்வு அறிவிப்புகளில் tiny.url மற்றும் QR Code ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன், பற்று அட்டை மூலமாக, வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரி சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாநகராட்சியின் வலைதளம் (www.chennai corporation.gov.in, http://www.chennai corporation.gov.in மூலமாகவும் எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் சொத்துவரி செலுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம். ‘நம்ம சென்னை’ மற்றும் ‘பே.டி.எம்’. உள்ளிட்ட கைப்பேசி செயலி மூலமாகவும், இ-சேவை மையங்ளிலும் சொத்து வரி செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்
சென்னை ஓ.எம்.ஆரில் காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் மையம்: நடிகர் விக்ரம் துவக்கி வைப்பு
வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு: செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை
கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம் : ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!