SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்கலை அருகே வேளிமலையில் மலையேறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் காட்டில் தவிப்பு: தீயணைப்பு துறை, பொதுமக்கள் மீட்டனர்

2022-07-03@ 00:57:56

தக்கலை: தக்கலை அருகே வேளிமலையில் மலை ஏறி சென்ற 4 இளைஞர்கள் திரும்ப முடியாமல் நடுக்காட்டில் தவித்தனர். தீயணைப்பு துறை, பொதுமக்கள் அவர்களை மீட்டு வந்தனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே வேளிமலையில் மலையேறும் பயிற்சி செல்வது வாடிக்கை. கடந்த 2 தினங்களுக்கு முன் தக்கலை அடுத்த மூலச்சல் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் குழுவாக மலையேற்றம்  மற்றும்  சூழியல் சுற்றுலா செல்ல முடிவெடுத்து பெருஞ்சிலம்பு சென்றனர். அடிவாரத்தில் இருந்து காலை 8 மணியளவில் மலையேற தொடங்கினர். மாலை 3 மணிக்கே அந்த பகுதி இருட்ட தொடங்கி விட்டது. வந்திருந்த 4 பேருக்கும் வழிப்பாதையும் மறந்து போனது. எந்த வழியாக திரும்ப வேண்டும் என்பது தெரியவில்லை. மேலும் 4 பேரின் செல்போனிலும் டவர் கட் ஆனது. 4 பேரும் மரண பயத்தில் தவித்தனர். ஏற்கனவே இந்த பகுதியில் அங்கும், இங்கும் ஓடி அலைந்து திரிந்த நிலையில் ஒரு இளைஞரின் செல்போனுக்கு சிக்னல் கிடைத்தது. அதை வைத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு (எண் 101 ) தகவல் கூறினர். தகவலறிந்து தீயணைப்பு துறையினரும், உறவினர்களும் விரைந்து சென்று கயிறு உள்ளிட்ட உபகரணங்களுடன் மலையேறி அங்கு சிக்கி தவித்தவர்களை மீட்டனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்