நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வு
2022-07-03@ 00:57:47

நாமக்கல்: நாமக்கல்லில் இன்று நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று அருந்ததியர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று (3ம் தேதி) நடைபெறுகிறது. இதற்காக கரூர் மாவட்டத்தில் இருந்து, நேற்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாமக்கல்லுக்கு வந்தார். கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி, சிறிது நேரம் முதல்வர் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலையில் சுற்றுலா மாளிகை எதிரே சிலுவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனிக்கு சென்ற முதல்வர், அங்குள்ளவர்ளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது 3 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், கோவை மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கவினுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மேலும் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் என 3 சதவீத அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் மூலம், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுடனும், அரசு பணியில் உள்ள அருந்ததியர் குடியிருப்பு இளைஞர்களிடமும், முதல்வர் வாஞ்சையுடன் கலந்துரையாடினார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஓமியோபதி மருத்துவர் ஜெயபிரகாஷ் வீட்டுக்கு சென்ற முதல்வர், அவருடன் அமர்ந்து டீ குடித்தார். அப்போது கலெக்டர் ஸ்ரேயா சிங் உடனிருந்தார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென தங்களது இருப்பிடம் தேடி முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தது அப்பகுதி பெண்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரிடம் சகஜமாக பேசி, திமுக அரசு தங்களுக்கு வழங்கிய 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பெற்று வரும் நன்மைகளுக்காக நன்றி தெரிவித்தனர். மேலும், தங்களுடன் அன்பாகப் பேசி நலம் விசாரித்ததுடன், தங்களில் ஒருவர் போல் முதல்வர் பழகியது, மக்களிடையே பெரிதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:
In Namakkal Arunthathiyar residence CM survey நாமக்கல் அருந்ததியர் குடியிருப்பில் முதல்வர் ஆய்வுமேலும் செய்திகள்
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் நீர்திறப்பு அதிகரிப்பு; நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
பேச்சிப்பாறையில் இன்று உலக பழங்குடியினர் தின விழா: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
சாரல் திருவிழாவின் இன்று 5ம் நாள் கொண்டாட்டம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் மாரத்தான் போட்டி; ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கையடக்க கணினியை கொண்டு 185 ரயிலில் டிக்கெட் பரிசோதனை: சேலம் கோட்டத்திற்கு 124 கருவி வழங்கல்
நெல்லை-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படுமா?..தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
கமுதி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் நடுகல் கண்டெடுப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!