மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ: டி.ராஜா குற்றச்சாட்டு
2022-07-03@ 00:57:42

திருவில்லிபுத்தூர்: இந்தியாவில் மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த பாஜ முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: இந்தியாவில் பொருளாதார சிக்கல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தேர்தலாக பார்க்கக் கூடாது. இடதுசாரி கொள்கைகளை அடிப்படையாக கொண்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கும், மதவாத அரசியலை முன்னிறுத்தும் பாஜ தலைமையிலான கூட்டணிக்கும் இடையேயான தேர்தலாகும். நாட்டில் மதச்சண்டையை உருவாக்கி, மக்களை பிளவுபடுத்த பாஜ முயற்சிக்கிறது. நூபுர் சர்மாவின் கருத்து உலகளவில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிராக கருத்து சொல்லும், அனைவரையும் கைது செய்வது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
BJP T.Raja alleges sectarian strife creates and divides people மதச்சண்டை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ டி.ராஜா குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
ஆளுநர் மாளிகையில் ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு?.. அண்ணாமலை கேள்வி
5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு: சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!