பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்
2022-07-03@ 00:57:15

புதுடெல்லி: டெல்லியில் இருந்து ஜபால்பூர் புறப்பட்டு சென்ற தனியார் விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்திற்குள் புகை வந்ததால் உடனடியாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம், ஜபால்பூர் நோக்கி பயணிகளுடன் நேற்று காலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 5 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்திற்குள் திடீரென புகை ஏற்பட்டது.
இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், விமானத்தை தரையிறக்குவதற்கு விமானி முடிவு செய்தார். உடனடியாக விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேறினார்கள். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் அவசரமாக தரையிறங்குவது கடந்த 15 நாட்களில் 5வது முறையாக நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
Tags:
Passengers screaming 5000 feet high smoke on board 5th incident in 15 days பயணிகள் அலறல் 5000 அடி உயர விமானத்தில் புகை 15 நாளில் 5வது சம்பவம்மேலும் செய்திகள்
கொரோனா பரவல் ஆபத்து; பண்டிகை நெருங்குவதால் எச்சரிக்கை தேவை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
ஒரே நேரத்தில் 110 மாணவர்களுக்கு காய்ச்சல்: சட்டீஸ்கர் பள்ளியில் விசாரணை
பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா
ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
விமானத்தின் கழிவறையில் கிடந்த ‘டிஷ்யூ’ பேப்பரில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வாசகம்: பெங்களூருவில் பரபரப்பு
மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் பாஜக - 9; சிவசேனா - 9 அமைச்சர்கள் பதவியேற்பு : 40 நாட்களாக நடந்த இழுபறி முடிவுக்கு வந்தது
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!