கேத்தரின் நீர்வீழ்ச்சியில் இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு
2022-07-02@ 13:04:43

கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி, பெரிய சோலை, தட்டப்பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதியில் இனப்பெருக்கத்திற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்து தற்போது எண்ணற்ற பறவைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 62 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இதனால் இங்கு சிறந்த உயிர்ச் சூழல் மண்டலமாக திகழ்கிறது.
கோத்தகிரி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக உள்ளது. கொடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங் வுட் சோலா ஆகிய பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். தற்போது இந்த பகுதியில் மரங்களில் மற்றும் தாவர வகைகளில் பழங்கள் அதிகமாக காணப்படுவதால் பறவைகளுக்கு ஏற்ற உணவு கிடைக்கிறது.
இதமான காலநிலை மற்றும் உணவுக்காக மற்றும் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருவது வழக்கமாக உள்ளது. தற்போது பறவைகளின் உள்ளூர் வலசை துவங்கி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து கொடநாடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, மற்றும் லாங் உட் சோலா, பகுதிகளில் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த பறவைகளைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
பறவைகளை ஆவணப்படுத்தும் புகைப்பட கலைஞர் மதிமாறன் கூறுகையில், ‘‘கோத்தகிரியில் ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் வனப்பகுதியில் பறவைகளுக்கு ஏற்ற பழவகைகள் அதிகமாக உள்ளது.
இந்த பழ வகைகளை உண்ணவும் இனப்பெருக்கத்திற்காகவும் தற்போது சமவெளிப் பகுதியில் இருந்து பறவைகள் உள்ளூர் வலசை தொடங்கியுள்ளது. இது பறவைகளை பார்ப்பவர்களும் சுற்றுலா பயணிகளும் மிக மகிழ்ச்சியாக கண்டு களிக்கிறார்கள். நீலகிரி பிளைகேச்சர் மலபார் விசிலிங் திரஸ், நீலகிரி லாப்பிங் திரஸ், ஒயிட் சீக் பார்பிட்ஒயிட் ஜ, ஆரஞ்சு ஏல்லோ பிளைக்கோச்சர் மற்றும் நூற்றுக்கணக்கான பறவையினங்கள் கோத்தகிரி பகுதியில் அதிகமாக காணப்படுகிறது’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்தவர்கள் சிக்க வாய்ப்பு போலி பத்திரப்பதிவுகள் குறித்து புகார் அளிக்கலாம்: சிவகாசி சார்பதிவாளர் அதிரடி
நாமக்கல் அருகே அலுவலகத்தில் விஏஓ மர்மச்சாவு
டிஎஸ்பி ஆபீஸ் வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஏட்டு
ஆரணி நகராட்சியில் ஒப்பந்ததாரரின் அவலம் போர்வெல்லை மூழ்கடித்து சிமென்ட் சாலை அமைப்பு
வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்: ஐகோர்ட் உத்தரவு
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!