SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிம்ஸ் பூங்காவில் ஆப்பிள் சீசன் துவங்கியது

2022-07-02@ 13:03:14

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழவியல் நிலையத்தில் ஊட்டி பச்சை ஆப்பிள் சீசன் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய அரிய வகை பழங்கள் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில், குறிப்பாக, குழந்தை பாக்கியத்தை தரும் துரியன் பழம் மட்டுமின்றி, பேரி, பிளம்ஸ், பீச், கமலா ஆரஞ்ச், ரம்புட்டான், பப்பினோ உட்பட பல்வேறு பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவற்றில் ஊட்டி ஆப்பிள் என அழைக்கப்படும் பச்சை ஆப்பிள் சீசன் தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்காவில் துவங்கியுள்ளது. இதன் மரங்களில் கொத்து கொத்தாக பச்சை நிறங்களில் காய்த்து குலுங்குகிறது. சிம்லா, காஷ்மீர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆப்பிளின் வண்ணங்களைபோல் அல்லாமல் இவ்வகை ஆப்பிள் பச்சை நிறத்திலேயே காணப்படுவது தனி சிறப்பு.

இந்த வகை ஆப்பிள் இனிப்பு இல்லாமல் புளிப்பு அதிகமாக இருக்கும், கர்ப்பிணிகளுக்கு பயனளிக்கும் என்று தோட்டகலைத்துறையிரனர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்