தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ856 உயர்வு
2022-07-02@ 00:40:00

சென்னை: தங்கத்தின் விலையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ856 உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் தங்கத்தில் இருந்த முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
இதன் காரணமாக தங்கம் விலை சரிவு கண்டது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 107 ரூபாய் உயர்ந்து ரூ4,785க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ856 உயர்ந்து ரூ38,280க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ41,472க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 10 பைசா குறைந்து ரூ65க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ65,000 ஆக உள்ளது.
மேலும் செய்திகள்
பங்குச்சந்தை அபாரம் சென்செக்ஸ் 60,000ஐ தாண்டியது
சரிவுடன் தொடங்கிய தங்க விலை... சென்னையில் சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்தது
மக்களே தங்கம் வாங்க சரியான நேரம்...சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120-க்கு விற்பனை
தங்கம் விலையில் அதிரடி; காலையில் குறைந்து மாலையில் அதிகரிப்பு: நகை வாங்குவோர் குழப்பம்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!