மணிப்பூரில் மீட்பு பணிகள் தீவிரம்; நிலச்சரிவில் புதைந்த 60 பேர் கதி என்ன?.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
2022-07-02@ 00:08:43

இம்பால்: மணிப்பூர் நிலச்சரிவில் பலியானாவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மண்ணில் புதைந்த பிராந்திய வீரர்கள் உட்பட 60 பேரின் கதி பற்றி கவலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மணிப்பூரில் ேநானி மாவட்டத்தில் துபுல் யார்டு அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக பிராந்திய ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த புதன் இரவு இங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முகாம்்களில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த பிராந்திய வீரர்கள், தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படை, மணிப்பூர் பிராந்திய வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரையில் 7 வீரர்கள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
நேற்று மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து, நிலச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13 வீரர்களும், பொதுமக்கள் 5 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்கிறது. மேலும், 60 பேர் மண்ணில் புதைந்து, காணாமல் போயுள்ளனர். சம்பவம் நடந்து 2 நாட்களாகி விட்டதால், இவர்களின் கதி என்னவானது என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.
மேலும் செய்திகள்
இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கிய தலைவர்கள்..!!
மகாத்மா காந்தி எந்த பல்கலைக்கழகத்திலும் படித்து பட்டம் பெறவில்லை: ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் கருத்தால் சர்ச்சை
எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி.. அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு!
வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!
2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை
வாரணாசியில் மோடி அறிவிப்பு 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி