கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி: ஒன்றிய அரசு தகவல்
2022-07-01@ 21:34:14

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) ரயில்களில் முதல் வகுப்பு ஏ.சி.யில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதேபோல முன்னாள் எம்பிக்கள் 2ம் வகுப்பு ஏ.சி.யில் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏ.சி.யில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம்.
இதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு செலுத்தும். ரயில்வேயின் கட்டணம் மற்றும் கணக்குகள் துறை இதற்கான ரசீதை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயணம் செய்த வகையில் ஒன்றிய அரசு செலவழித்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் கடிதம் அனுப்பினார்.
இதற்கு மக்களவை செயலகம், ‘கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி’ என பதிலளித்துள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்பிக்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்பிக்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21-ம் ஆண்டில் இந்த செலவு முறையே ரூ.1.18 கோடி மற்றும் ரூ.1.29 கோடி எனவும் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...