காலில் லுங்கி மாட்டி கீழே விழுந்தவர் பலி
2022-07-01@ 20:50:59

பெரம்பூர்: சென்னை திருவிக நகர், கே.சி கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் குட்டி (46). பிளம்பர். இவருக்கு மனைவி சரஸ்வதி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் கடந்த 26ம் தேதி பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா கார்டன் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனது பழைய வீட்டை காலி செய்வதற்காக சென்றிருக்கிறார்.
அப்போது மாடியில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு கீழே வரும்போது, அவர் கட்டியிருந்த லுங்கி காலில் சிக்கி, படிக்கட்டிலிருந்து உருண்டு கீழே விழுந்திருக்கிறார். இதில் குட்டிக்கு தலை மட்டும் நடுமுதுகுத்தண்டில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9 மணியளவில் குட்டி பரிதாபமாக பலியானார். இப்புகாரின்பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
பைக் மீது அரசு பஸ் மோதி 2 ஐடி ஊழியர்கள் படுகாயம்
சென்னை ஓ.எம்.ஆரில் காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் மையம்: நடிகர் விக்ரம் துவக்கி வைப்பு
வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு: செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை
கோயில் திருவிழாவில் தாக்கியதால் முன்விரோதம் சிறையில் இருந்து வெளியே வந்த 2 நாளில் ரவுடி வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நந்தனம் கல்லூரியில் 3 நாட்கள் பிரமாண்ட சென்னை திருவிழா: ஜெகத் கஸ்பர் பேட்டி
தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம் : ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!