பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு மாஜி எம்எல்ஏவின் மகனுக்கு போலீஸ் வலை
2022-07-01@ 20:49:54

புதுச்சேரி: பட்டதாரி பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த மாஜி எம்எல்ஏவின் மகன், உறவினர் மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். புதுச்சேரி, திருபுவனையைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ காத்தவராயன் மகன் மகேஸ்வரன் (32). விவசாயியான மகேஸ்வரன் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்ணை சில வருடங்களுக்குமுன்பு காதலித்து வந்தாராம். தனியார் கம்பெனியில் பணிபுரிந்த அப்பெண்ணை காதலித்து ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியதாக தெரிகிறது.
இதனிடையே பட்டதாரி பெண்ணுக்கு அவரது வீட்டார் வேறுஇடத்தில் மாப்பிள்ளை பார்த்த நிலையில், இவ்விவகாரம் மகேஸ்வரனுக்கு தெரியவரவே அப்பெண்ணிடம் ஏற்கனவே தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காண்பித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யாமல் மகேஸ்வரனுடன் அப்பெண் சென்றாராம். ஆனால் அதன்பிறகும் பட்டதாரி பெண்ணை முறைப்படி திருமணம் செய்யாமல் ஆசைவார்த்தைகளை கூறி பலாத்காரத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் கருவுற்றதாக தெரிகிறது.
அதன்பிறகு அப்பெண்ணுக்கு தெரியாமலேயே மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொண்டு கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கையில் அவ்வப்போது மகேஸ்வரன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இதுபோன்று கருக்கலைப்பு சம்பவத்திற்காக மகேஸ்வரன் முயன்றபோது, அப்பெண் மறுத்துள்ளார். தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அப்பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுத்த மகேஸ்வரன், அவரை மிரட்டியதோடு கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபடவே உடல்நிலை பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் எல்லைபிள்ளைச்சாவடி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண், திருபுவனை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் முன்னாள் எம்எல்ஏ மகேஸ்வரன் மீது பலாத்காரம் செய்தல், கருக்கலைப்பு செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். மகேஸ்வரனுக்கு உடந்தையாக இருந்த அவரது தங்கையின் கணவர் திருவரசன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான 2 பேரையும் தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனியை வீசி பாஜகவினர் அராஜகம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!
செய்யூர் அருகே அதிமுக தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் திடீர் சாலை மறியல்
திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி; பயணிகள் கோரிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!