ஏக்நாத் முதல்வரான நிலையில் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
2022-07-01@ 20:28:34

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்ேட முதல்வரான நிலையில், தற்போது எதிர்கட்சியை சேர்ந்த சரத்பவாருக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஏக்நாத் ஷிண்டே முதல்வரான பின்னர், எனக்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2004, 2009, 2014 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் தொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் அனுப்பப்பட்ட காதல் கடிதமாகும். ஒன்றிய பாஜக அரசு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி குறிப்பிட்ட நபர்களின் தகவல்களைச் சேகரித்து வருகிறது. பல ஆண்டுகளாக தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்துவதும், குறிப்பிட்ட நபர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதும் ஒரு முதன்மையான திட்டமாக தெரிகிறது’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவு மற்றும் ஒயின் திருவிழா: மதுபிரியர்கள் குதூகலம்..!!
நாட்டிற்கு எதிரான போலி செய்திகளை வெளியிட்டதாக 8 யூடியூப் சேனல்களை முடக்கியது ஒன்றிய அரசு..!!
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் லாலு பிரசாத் யாதவுடன் சந்திப்பு: உடல் நலம் விசாரித்தார்
மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...
கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...