SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் “வேண்டாம் போதை” (No to Drugs) விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரை

2022-07-01@ 15:59:33

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கோடம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் “வேண்டாம் போதை” (No to Drugs)  விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கஞ்சா, மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், LSD ஸ்டாம்புகள், Hash எனப்படும் கஞ்சா ஆயில் போன்ற நவீன காலத்து போதை பொருட்கள் மற்றும் டைடல், நைட்ரவிட் உள்ளிட்ட உடல்வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக, சென்னை பெருநகர காவல்துறை மூலம் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், தீவிரமாக கண்காணித்தும் மேற்கண்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக, காவல் அதிகாரிகள் தலைமையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஜுன் 26-ம் நாள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி (International Day Against Drug abuse and Illicit Trafficking) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், கடந்த  24.06.2022 காலை காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் சார்பாக, போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் அறிவுரைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் (Banners), சுவரொட்டிகள் (Posters) மற்றும் துண்டு பிரசுரங்கள் (Awareness Pamphlets) வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (01.07.2022)  கோடம்பாக்கம், பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட  “வேண்டாம் போதை” விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில்  இணை ஆணையாளர் (வடக்கு) ரம்யாபாரதி, மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ்,  தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் தியாகச் செம்மல், முஹம்மது நவீன் (District Governor Lions Club),  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • om-mathan-kark

    சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்