SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை... வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!!

2022-07-01@ 11:22:45

ஸ்டாக்ஹோம் : இந்தியாவின் தங்க மகன் என்று வர்ணிக்கப்படும் நீரஜ் சோப்ரா ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் முன்னிலை வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆடவருக்கான ஈட்டி எரிதலில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா, 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2ம்  இடத்தை பிடித்தார்.

என்றாலும் அவரது இந்த முயற்சி புதிய தேசிய சாதனையாக அமைந்துள்ளது. பின்லாந்தில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சாதனை படைத்து இருந்தார். அதனை தற்போது அவரே டைமண்ட் லீக் போட்டியில் முறியடித்துக் கொண்டுள்ளார்.  டைமண்ட் லீக் போட்டியில் இதற்கு முன்பு 2017, 2018ல் பங்கேற்றாலும் நீரஜ் பதக்கம் வெல்ல முயலவில்லை. 2 முறையும் 4ம் இடத்தையே பிடித்தார். தற்போது வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி அவர் பெருமை சேர்த்துள்ளார்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்