'BYEBYE MODI': பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைக்கப்பட்ட விளம்பர பலகைகளால் ஐதராபாத்தில் பரபரப்பு..!!
2022-07-01@ 10:58:26

ஐதராபாத்: ஐதராபாத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பர பலகைகள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால் அங்கு பலத்த ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியினர் செய்து வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'பை பை மோடி' என்று எழுதப்பட்ட விளம்பர பலகைகளும், பேனர்களும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்தன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பிரதமர் மோடி வரும்போதெல்லாம் 'GOBACKMODI' என சமூக வலைத்தளங்களில் டிரண்ட் செய்யப்படுவது வழக்கம். தெலுங்கானா மாநிலத்திலும் முதல்வர் சந்திரசேகர ராவ் மோடி எதிர்ப்பாளராக ஈடுபட்டுள்ள நிலையில், மோடி வருகையையொட்டி அவருக்கு எதிராக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மோடி எதிர்ப்பு பேனர்களை அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
75ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு...
மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!
சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: வானிலிருந்து பொழிந்த 'பூ' மழை..!
பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!