SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை!! .

2022-07-01@ 07:44:27

சேலம்: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது .இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், காஸ் சிலிண்டருக்கான விலையை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்த்தாமல் ஒரே நிலையில் வைத்திருந்தனர். தேர்தல் முடிந்ததும், திடீரென மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ரூ.965.50 என விலை உயர்ந்தது. இந்த விலையில் ஏப்ரல் மாதம் ஏப்ரல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

மே மாதம் 7ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை அதிரடியாக ரூ.50 அதிகரித்து அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.1000ஐ தாண்டியது. அப்போது, வர்த்தக சிலிண்டர் விலை ரூ.9.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.2,498.50 ஆகவும், சேலத்தில் ரூ.2,452 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே மே மாதம் 2வது முறையாக திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.3, வர்த்தக காஸ் விலை ரூ.8.50 அதிகரிக்கப்பட்டது. இதனால் வீட்டு உபயோக காஸ் விலை சென்னையில் ரூ.1018.50, ஆக அதிகரித்தது. இதேபோல், வர்த்தக காஸ் விலை சென்னையில் ரூ.2,498.50ல் இருந்து ரூ.8.50 அதிகரித்து ரூ.2,507 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் மாதம் பொறுத்தவரை வணிக பயன்பாட்டுக்கான கேஸ் விலை  ரூ.134 குறைத்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஜூலை) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த மாத விலையிலேயே நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாத விலையில் இருந்து ரூ.187 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.2,373க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், நடப்பு மாதம் ரூ.187குறைந்து, ரூ.2,186 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்