ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
2022-07-01@ 00:04:27

ஆவடி: ஆவடி சட்டமன்றத் தொகுதியில் நேற்றுமுன்தினம் ரூ.24.5 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 13 மின் டிரான்ஸ்பார்மர்களின் பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார்.
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காமராஜர் நகர் 6வது தெரு, ஜீவானந்தம் தெரு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 19வது தெரு, பட்டாபிராம் பகுதியில் ராமலிங்கபுரம் முதல் தெரு, லட்சுமி நகர், வள்ளலார் நகர் 7வது தெரு, காந்திநகர் 2வது தெரு, திருநின்றவூரில் எம்ஜிஆர் நகர் பிரதான சாலை, திருமுல்லைவாயலில் பாரதியார் நகர், திருவள்ளூர் 4வது தெரு, கலைஞர் 2வது தெரு, செந்தில் நகர், ராஜாஜி தெரு, வைஷ்ணவி நகர் 9வது தெரு ஆகிய 13 இடங்களில் வளைய சுற்றுத்தர அமைப்புடன் கூடிய புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், ஆவடி சட்டமன்றத் தொகுதியில் புதிதாக நிறுவப்பட்ட 13 மின் டிரான்ஸ்பார்மர்களின் பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், ஆவடி கிழக்கு மண்டல பொறுப்பாளர் பேபி சேகர், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், மின்வாரிய பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வைகை அணையின் நீர்மட்டம் உயர்வால் நீர்திறப்பு அதிகரிப்பு; நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
பேச்சிப்பாறையில் இன்று உலக பழங்குடியினர் தின விழா: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
சாரல் திருவிழாவின் இன்று 5ம் நாள் கொண்டாட்டம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் மாரத்தான் போட்டி; ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கையடக்க கணினியை கொண்டு 185 ரயிலில் டிக்கெட் பரிசோதனை: சேலம் கோட்டத்திற்கு 124 கருவி வழங்கல்
நெல்லை-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படுமா?..தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
கமுதி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் நடுகல் கண்டெடுப்பு
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!