SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழிப்பறி கொள்ளையர்கள் கைது; 40 செல்போன்கள் பறிமுதல்

2022-07-01@ 00:04:24

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த கஜலட்சுமி (45), கடந்த 25ம் தேதி வாசலில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவரிடமிருந்து 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர்.

அதில், காஞ்சிபுரம் சிவக்குமார் (30), திருவள்ளூர் சிபி (25) ஆகியோர், பைக் திருட்டு, செல்போன் பறிப்பதை  தொடர்ச்சியாக செய்து வந்ததும் தெரிந்தது. மேலும், இவர்களுக்கு உடந்தையாக  இருந்தஅரும்பாக்கம் முகமது நியாஸ் (30), செல்வகுமார் (எ) அப்துல்லா (34), ஜமால் (42), சையத் இப்ராகிம் (30) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 8 சவரன் தங்க நகை, 3 பைக், 40 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்