அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தேர்தல் நிதி பத்திரங்கள் இன்று முதல் விற்பனை; ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு
2022-07-01@ 00:04:02

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மாற்றாக, அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடும் அங்கீகாரம், எஸ்பிஐ வங்கிக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மூலமாக 21வது கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனையை ஜூலை 1 (இன்று) முதல் ஜூலை 10 வரையில், அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தொடங்குவதற்கும், இந்த பத்திரங்களை பணமாக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை உட்பட 14 கிளைகளில் பத்திரங்கள் விற்பனை நடக்கும். இந்த பத்திரம் வாங்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு பிறகு டெபாசிட் செய்யும் எந்த கட்சிகளுக்கும் பணம் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நாட்டுக்காக பதக்கங்கள் வென்றது டேபிள் டென்னிஸ்க்கே பெருமை!: தமிழ்நாடு வீரர் சரத்கமல் பேச்சு
2 தடுப்பூசி போட்டவர்களுக்கு ‘கோர்பிவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அரசு அனுமதி
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு...
விற்பனையாகாததால் வேதனை சாலையில் டன் கணக்கில் தக்காளியை வீசிய விவசாயிகள்
75 வயது மாஜி ராணுவ வீரரின் 70 வயது மனைவிக்கு 54 ஆண்டுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது: ராஜஸ்தானில் அதிசயம்
சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!