சுகேஷ் சிறை மாற்ற வழக்கு; உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
2022-07-01@ 00:03:58

புதுடெல்லி: ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு வாங்கித்தர தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் இருக்கும் தன் மீதான அனைத்து முறைகேடு வழக்குகளையும் கர்நாடகா அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும். திகார் சிறையில் இருக்கும் தனக்கும் தனது மனைவி லீனா பாலுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளிமாநில சிறைக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சுகேஷ் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சூரியகாந்த், பர்திவாலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட சுகேஷ் சந்திரசேகர் தரப்பு வழக்கறிஞர், இதனை அவரச வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். அதை நிராகரித்த நீதிபதிகள், ‘இதை அவசரமாக விசாரிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது யாரும் எதுவும் செய்துவிட முடியாது,’ என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி
ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்
75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்
கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
ரக்ஷா பந்தன் பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!