மணிப்பூர் நிலச்சரிவில் 8 பேர் புதைந்து பலி; ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் மாயம்
2022-07-01@ 00:03:55

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பிராந்திய ராணுவ வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவே கனமழை பெய்து வருகிறது. அசாம், திரிபுராவில் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மணிப்பூரிலும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இங்குள்ள நோனி மாவட்டத்தின் துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாம் அருகே நேற்று முன்தினம் இரவு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் பலியாகினர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பிராந்திய ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள் உட்பட 70 பேர் சிக்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவின்போது ராட்சத பாறைகள் உருண்டு, இஜெய் ஆற்றில் விழுந்ததால் ஏராளமானோர் இதில் சிக்கி புதைந்து இருக்கலாம் என கருதப்படுவதால் பதற்றம் நிலவுகிறது. இதனால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும், நிலச்சரிவினால் சரிந்த மண், பாறைகள் இஜெய் ஆற்றில் விழுந்ததால், நீரோட்டம் தடைப்பட்டு இங்குள்ள அணை உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அணை உடைந்தால் நோனி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் பெரும் அழிவு ஏற்படும். இதனால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை 37ல் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு இருப்பதால், போக்குவரத்து பாதித்துள்ளது. மீட்பு பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் கேட்டறிந்தார்.
இதுகுறித்து அமித்ஷா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மணிப்பூரில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து முதல்வர் பிரேன் சிங், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரிடம் பேசினேன். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிட மீட்புக்குழு ஏற்கனவே மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், 2 குழுக்கள் துபுலுக்குச் செல்கிறது,’ என்று கூறி உள்ளார். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தானில் அன்பின் வெளிப்பாடாக சிறுத்தைக்கு ராக்கி கட்டிய பெண்; ஐஎப்எஸ் அதிகாரி பாராட்டு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு: தேவஸ்தான கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் கைது...
குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது: ஒன்றிய அரசு விளக்கம்
மதமில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களுக்கு சலுகைகளை நிராகரிக்க கூடாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் திறப்பு நிறுத்தம்: நீர் வளத்துறை தகவல்
ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களை கைது செய்த சிபிஐ டிஎஸ்பி-யை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி? டிரைவர் பலி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!