SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களையெடுக்கும் நடவடிக்கையால் தாமரை நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-07-01@ 00:01:42

‘‘கட்சி என்று ஒன்று இருப்பதே பலருக்கு இப்போதுதான் தெரிகிறது. அதுலேயும் களையெடுப்புனு ஆரம்பிச்சா இருக்கும் நாலும் வேறு வேறு கட்சிக்கு போகலாம்னு யோசிக்கிறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியில் களையெடுக்கும் நடவடிக்கையால் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருக்காங்க. புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதால், ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்து கட்சிக்காக சொந்த காசை செலவு செய்தவர்கள், வேலையை விட்டு கட்சி பணியாற்றியவர்களை நீக்கி வர்றாங்களாம். இதனால, ‘ஆரம்ப கட்டத்தில் இருந்து கட்சிக்காக உழைத்த எங்களுக்கு கிடைத்த வெகுமதி இதுதானா’ என தாமரை கட்சியின் ஆரம்ப கால தொண்டர்கள் அதிருப்தியில இருக்காங்களாம். இதேபோல் 2 நாட்களுக்கு முன்பு வெயிலூர் மாநகர மண்டல நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டாங்க. இதற்காக, ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வேறு பொறுப்பு வழங்குவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் ஏற்கனவே மாவட்ட நிர்வாகி மாற்றத்தால் அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. அதுபோதாது என்று புதிதாக டம்மி பதவியை கொடுக்க நினைக்கிறார்கள் என்ற கொந்தளிப்பில் இருக்காங்களாம். காரணம் வெயிலூர் மாவட்ட மாஜி நிர்வாகிக்கு மாநில அளவில் ஒன்றுக்கும் இல்லாத பொறுப்பு வழங்கப்பட்டு விட்டதாக கட்சியினர் மத்தியில் எதிரொலித்துள்ளது. கட்சியில் களை எடுப்பது, புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகளால் கட்சி வளரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெயிலூர் மாநகர் மட்டுமல்ல பல மாவட்டங்களில் பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டி, சிறைக்கும் செல்ல தயாராக இருக்கும் நபரை நிர்வாகிகளாக நியமித்து வர்றாங்களாம்... இது இன்னும் பழைய நிர்வாகிகளை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்ட மேட்டர் ஒன்றை சொல்லேன், கேட்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்தின் தாமரை எம்எல்ஏ இலை கட்சியில் இருந்து தேசிய கட்சிக்கு தாவியவர். தற்போது அவர் தேசிய கட்சியின் எம்எல்ஏ என்றாலும், இலை கட்சி குறித்து அவ்வப்போது வாய் திறக்க தவறுவதில்லை. சில சமயங்களில் இலை கட்சிக்கு அட்வைசும் கொடுப்பார். அடிக்கடி ஆன்மிக சுற்றுலாவாக திருச்செந்தூர் போவாராம். இந்நிலையில் சமீபத்தில் திருச்செந்தூருக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் இலை கட்சியின் தலைமை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, அவரும் சேலம்காரரை முதல்வராக்கியதே எங்கள் தேசிய கட்சியின் தலைமை தான் என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அடுத்து ஒற்றைத் தலைமை என்றால் சலசலப்புகள் இருக்கத் தான் செய்யும் என்று சமாளித்தார். மக்களவை தேர்தலுக்கு கூட்டணி குறித்து யாரும் வாய் திறக்காத நிலையில் அழையா விருந்தாளி போல, அடுத்தும் நாங்கள் இலை கட்சியுடன் தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், நாங்கள் இலையுடன் ஒட்டிக் கொண்டு தான் இருப்போம் என்ற அவரது வாய்சை இலை கட்சியினர் ரசிக்கவில்லை...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மருத்துவமனை திறப்பு தள்ளிபோவதற்கு என்ன காரணமாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்.
இதற்கு பதிலாக மனுநீதி சோழன் மாவட்டத்தில் தன் பெயரின் கடைசியில் ராஜ் என்ற முடியும் மாஜி அமைச்சரோ, நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தனது செல்வாக்கை காண்பிக்க வேண்டும் என அங்கு மருத்துவர்களான தனது மகன்களுக்காக பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை ஒன்றினை கட்டியுள்ளாராம். கொரோனா காலம், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் தடைபட்டு வந்த மருத்துவமனை கட்டிடம் ஒரு வழியாக தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளதாம். இந்த மருத்துவமனையை இந்தியாவின் துணை விவிவிஐபியை வைத்து திறப்பதற்கு முடிவு செய்து இருந்தார் ராஜ் ஆனவர். இதற்காக கடந்த மாதம் அவர் சென்னை வந்த போது நேரில் சந்தித்து தேதியும் கேட்டிருந்தாராம். வரும் 4ம் தேதி திறப்பு விழா நடத்துவதற்கு இந்தியாவின் துணை விவிவிஐபியை குடியரசு துணைத் தலைவர் தேதி அளித்ததையடுத்து கடந்த ஒரு வாரமாக திறப்பு விழாவிற்கான பணிகள் தடபுடலாக நடந்ததாம். இதற்காக மனுநீதி சோழன் மாவட்டம் முழுவதும் உள்ள இலை கட்சியினர் அனைவரும் அங்கு முகாமிட்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட இந்த தேதியிலும் மருத்துவமனை கட்டிட திறப்பு விழா நடக்க வில்லையாம். இதுபோன்று தள்ளி போய் கொண்டே இருப்பதால் மாஜி அமைச்சர் வருத்தத்தில் இருக்கிறாராம். பிரச்னை உள்ள நபர்களின் விழாக்களில் இந்தியாவின் துணை விவிவிஐபி பங்கேற்பதில்லை என்ற சாதாரண விஷயம் தெரியாமல் வருத்தப்பட்டு என்ன பலன் என்று அவரை சுற்றி இருப்பவர்கள் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்