'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
2022-06-30@ 08:51:02

டெல்லி: பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அபராதத் தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டன. அந்த வகையில், பான் கார்டோடு ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய நேரடி வரிகள் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூலை 1ம் தேதியுடன் அபராதம் 1000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களது பான் எண் மார்ச் 31ம் தேதி முதல் முடக்கப்படும். அபராதத்தொகையை செலுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் பயன்படுத்த முடியும்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இணைப்பது எப்படி?
1. ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
2. அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
3. இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.
4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.
5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.
6. இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்.
பான்-ஆதார் இணைக்கப்பட்டதா என எவ்வாறு பரிசோதிப்பது:
www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதில் பான் எண், பிறந்ததேதி, குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்ய வேண்டும். இறுதியாக சப்மிட் பட்டனை கிளிக் செய்தால், இணைப்புகுறித்த செய்தி வரும்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா... 72 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
ரூ.215 கோடி மிரட்டி பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி: குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்
தவுசன்ட் வாலா, ஜிலேபி பாக்ஸ் டண்டணக்கா ஆன கதையை சொல்கிறார் wiki: யானந்தா
அவங்க எங்கே... நாம எங்கே... அமெரிக்கா ஓட்டலில் ஜெய்சங்கர் ஆச்சர்யம்: சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ
உள்ளூர் வியாபாரிகளுக்கு நற்செய்தி பழையபடி ரயில் பயணத்தில் பொருட்களை விற்க அனுமதி: ரயில்வே புதிய திட்டம்
1-4 வயது குழந்தைகளுக்கு டிக்கெட் தேைவயில்லை: ரயில்வே விளக்கம்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!