ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
2022-06-30@ 08:38:10

சென்னை : ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்! தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை அனுபவித்தவர் ஜமதக்கனி. மார்க்ஸ் எழுதிய Das Capital என்ற நூலை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் அவர்.
அனைத்துக்கும் மேலாக தென்னாட்டு ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாளின் மருமகன் ஜமதக்கனி! நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஜமதக்கனி செய்த தியாகங்களும், படைத்த சாதனைகளும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அவரது பெருமைகளையும், சிறப்புகளையும் மக்களிடம்கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு! இராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனியின் பெயர் சூட்டும்படி 09.03.2020-இல் கோரிக்கை விடுத்தேன். இப்போது மீண்டும் வலியுறுத்துகிறேன்.... ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்; வளாகத்தில் அவரது சிலையையும் அமைக்க வேண்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!