SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி

2022-06-30@ 03:19:55

திருவனந்தபுரம்: சாட்சிகளை மிரட்டியது உள்பட ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை, எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக கூறி, திலீப் கைது செய்யப்பட்டார். கடந்த 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ‘சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. ஆதாரங்களை அழிக்கக்கூடாது’ என்பது உள்பட சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.
இந்நிலையில், திலீப் சாட்சிகளை கலைத்துவிட்டதாகவும், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாலும் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது கடந்த சில தினங்களாக விசாரணை நடந்து வந்தது. போலீஸ் மற்றும் திலீப் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹனி எம்.வர்கீஸ், குற்றப்பிரிவு போலீசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இது போலீசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. திலீப்பின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டால், அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்த திட்டம் தற்போது தோல்வி அடைந்ததை தொடர்ந்து, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுக குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்