SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒற்றை தலைமையால் மா.செ.க்கள் குறுநில மன்னர்களாகும் வாய்ப்பிருப்பதாக நிர்வாகிகள் அஞ்சுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2022-06-30@ 03:15:14

‘‘பட்டமளிப்பு விழா என்ற பெயரில் மாணவர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை சுருட்டிய தகவல் கசிந்ததால் பீதியில் உள்ளார்களாமே பேராசிரியர்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடந்த 19வது பட்டமளிப்பு விழாவுக்கு அனைத்து பாடப்பிரிவுகளில் இருந்தும் 1486 மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான பொறுப்புக்களை கல்லூரி முதல்வர், பிறதுறைகளை சேர்ந்த 3 பேராசிரியர்களிடம் ஒப்படைத்து இருந்தாராம். நிகழ்ச்சி நடத்துவதற்காக பட்டம் பெற அழைக்கப்பட்டிருந்த 1,486 மாணவ-மாணவிகளிடம் இருந்து தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.14 எல்லுக்கு மேல் வசூலிக்கப்பட்டதாம். பட்டமளிப்பு விழா மதியம் 12 மணிக்கு முடிந்ததால் மதிய நேர உணவு வழங்குவார்கள் என வெளியூர்களில் இருந்து பட்டம் பெற வந்த மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்களாம். ஆனால் வெறும் டீ, ஸ்நாக்ஸ், ஸ்வீட் மட்டும் வழங்கப்பட்டதாம். ஆனால்  பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மட்டும் அறுசுவை உணவுடன் செம கவனிப்பாம். தகவல் தெரிந்த மாணவர்கள், இதுபற்றி அவர்களுடைய துறை பேராசிரியர்களிடம் புகாராக தெரிவித்து சென்றார்களாம். மாணவர்களிடம் இருந்து ரூ.14 லட்சத்து 86 ஆயிரம் வரை வசூலித்த பணத்தில் செலவு போக மீதி தொகை எவ்வளவு உள்ளது என கணக்கு காட்டாமல் விழா நடத்திய 3 பேராசிரியர்களே சுருட்டிய தகவல் கல்லூரி முதல்வருக்கு தெரியுமா, தெரியாதா என மற்ற பேராசிரியர்கள் மத்தியில் வெளிப்படையாகவே பேச தொடங்கி விட்டார்களாம். இந்த தகவல் கல்லூரி முழுவதும் கசிந்ததால் சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்கள் பீதியில் உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கி மேட்டர் ஏதாவது இருக்கா...’’‘சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோல் போக்குவரத்து  ஆய்வாளர்களும் முக்கியம். பூக்கடை காவல்  மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பூக்கடை, கோட்டை, யானைகவுனி,  கொத்தவால்சாவடி, முத்தியால்பேட்டை, வடக்கு கடற்கரை உள்ளிட்ட காவல்  நிலையங்களில் 6 போக்குவரத்து காவலர்கள் உள்ளனர். இவர்கள் ஒரு உதவி  ஆணையர் தலைமையில் செயல்படுகிறார்கள். பூக்கடை காவல்  நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகள் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதி. மேலும் முதல்வர் பாதுகாப்பு பணியும் உண்டு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காவல்  நிலையத்தில் உடல்நிலை சரியில்லாத போக்குவரத்து ஆய்வாளரை நியமித்துள்ளனர்.  சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர்  கலந்துகொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்த ஆய்வாளர்  மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலும் உடல்நலம் சரியில்லாமல் அடிக்கடி  விடுமுறையில் சென்று விடுகிறார். இதேபோல் முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர்  அடிக்கடி விடுப்பில் சென்று விடுகிறார். கொத்தவால்சாவடி ஆய்வாளரும் அடிக்கடி விடுப்பு எடுக்கிறாராம். இப்படி ஆய்வாளர்கள் விடுமுறையில்  சென்று விடுவதால் இந்த பகுதிகளில் போக்குவரத்து பிரச்னைகளை சரிசெய்ய போதிய  ஆட்கள் இல்லை. மேலும் ஏனோதானோ என்பதுபோல் வேலை பார்க்கிறார்கள். அவருக்கு  கீழே இருப்பவர்களோ இந்த பகுதியில் நல்ல வருமானத்தை பார்க்கின்றனர்.  ஆய்வாளர் பேரைச்சொல்லி நல்ல வசூலில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி மேல்  அதிகாரிகள் கேட்டால் கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து சரிகட்டி  விடுகின்றனர். யானைகவுனி, கொத்தவால்சாவடி, முத்தியால்பேட்டை ஆகிய  பகுதிகளில் மட்டுமே வருமானம் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது. வடக்கு  கடற்கரை போக்குவரத்து ஆய்வாளர் சீனியர் என்று கூறிவருவதோடு சரி. வேலையே பார்ப்பதில்லை’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்ட நிர்வாகிகள் தனியா ஒரு திட்டம் போட்டிருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘இலைக்கட்சியின்  தலைமை பொறுப்புக்கு வந்துவிட வேண்டும் என்பது தான் சேலத்துக்காரின் ஒரே  கனவா இருக்காம். இதற்காக அவர் போட்ட ஸ்கெட்ச் கொஞ்சம் தவறிப்போச்சாம்.  இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காம மாஜிக்கு, மாலை போட வந்த நிர்வாகியை ரொம்பவே  கடிஞ்சிக்கிட்டாராம். ஆனா கட்சியில ஒத்தை தலைமை தான் வேண்டுமுன்னு முக்கிய  நிர்வாகிகள் ஒத்தைக்காலில் நிக்காங்களாம். இவ்வாறு கட்சி ஒருவரிடம்  சென்றால் கட்சித்தொண்டர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போயிடுமுன்னு  கட்சியின் நிறுவனர் கூட இருந்த மூத்த முன்னோடிகள் சொல்றாங்களாம். அதே  நேரத்துல கட்சி படு ஸ்பீடா வளருமுன்னு ஒரு தரப்பு வாதம் பண்ணிக்கிட்டு  இருக்கு.  ஆனா மாங்கனி மாவட்ட நிர்வாகிகள் வேறு ஒரு கணக்கப் போட்டு  வச்சிக்கிட்டு இருக்காங்களாம். இவ்வாறு ஒத்தை தலைமை வருவதினால் அந்தந்த  மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர் போல இருப்பாங்க. அந்தந்த மாவட்டத்துல  அவர்கள் வைத்ததுதான் சட்டம். எதிர்கேள்வி கேட்க முடியாது. அவர்கள்  பெயருக்கு பக்கத்துல அந்தந்த மாவட்டத்தின் பெயரை போட்டுக்கிடுவாங்க.  இதனாலத்தான் அவர்கள் ஒத்தை தலைமைய அதிகமாக விரும்புறாங்க. அவர்களுக்கு  எதிராக உண்மை பேச முடியாது, இப்பவே அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு எதிர்  கோஷ்டிகள் இருக்கு. அந்த கோஷ்டியினர் அடியோடு புறக்கணிக்கப்படுவார்கள்.  ரெட்டை தலைமை இருந்தது என்றால் ரெண்டு கோஷ்டியையும் அனுசரிச்சிப் போவாங்க.  இப்போ இருக்கிற சூழ்நிலையில கட்சியும், சின்னமும் யாருக்கிட்ட வருதோ அவங்க  அணியில சேர்றதா மாங்கனியின் மூத்த நிர்வாகிகளோட எண்ணமா இருக்காம்’’  என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

 • china_taiwan

  தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

 • guinness-record-pull-ups-08

  பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

 • egypt-sun-temple-8

  எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்