இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் ரோகித்துக்கு பதிலாக பும்ரா கேப்டன்
2022-06-30@ 03:10:37

லண்டன்: ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இங்கிலாந்து அணியுடன் 5வது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாட இருந்த கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். நேற்று நடந்த 2வது பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, ‘5வது டெஸ்டில் ரோகித் விளையாட மாட்டார், அவருக்கு பதிலாக பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கும்’ என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை பும்ராவுக்கு கிடைத்துள்ளது. 1987ல் கபில் தேவ் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாகும் 36வது வீரர் ஆவார்.
மேலும் செய்திகள்
டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா இணை: ஜெசிகா, சிமோனா முன்னேற்றம்
சில்லி பாய்ன்ட்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!