கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம் கழுத்தறுத்து மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் கைது
2022-06-30@ 03:00:47

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, ரூ70 ஆயிரம் கடன் கொடுத்தை திருப்பி கேட்டதால், தைலமர தோப்பில் வைத்து மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு அருகே ஆத்தூர், சேந்தமங்கலம் காட்டுப் பகுதி உள்ளது. இங்கு, தைலமர தோப்பில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, பாலூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை யார், எதற்காக கொலை செய்தார்கள் என விசாரணை நடத்தினர். இதில், முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் காரணைபுதுச்சேரி பகுதியை சேர்ந்த லட்சுமி (60) என தெரிய வந்தது. இவர், நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அதன்பிறகு, காணாமல் போனதாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, குடும்ப சொத்து தகராறில் கூலிப்படை வைத்து கொன்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் உள்பட பலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், பாலூர் தனிப்படை போலீசார் ஆட்டோ டிரைவரை தேடி வந்தநிலையில், காரணைபுதுச்சேரி பகுதியில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆட்ேடா டிரைவர் ஆறுமுகம் கூறியதாவது, ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி லட்சுமியிடம் ரூ70 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், இதனை திருப்பி கொடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கே வந்து திருப்பி கேட்டார்.இதனால், எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. இவர் இருக்கும் வரை வாங்கிய கடனை திரும்ப கேட்டுக் கொண்டே தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பார். அதனால், கொலை செய்ய திட்டம் திட்டினேன். இந்நிலையில் நேற்று முன்தினம், சம்பவம் தன்று முத்துமாரியம்மன் கோயிலுக்கு லட்சுமி சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, நான் அவரை வழியில் பார்த்து ஆட்டோவை நிறுத்தினேன். தானும் வீட்டிற்கு தான் செல்கிறேன். எனவே, உங்களை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் என கூறினேன். அவரும் என்னுடைய பேச்சை கேட்டு ஆட்டோவில் ஏறினார். வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கோ அழைத்து செல்வதை உணர்ந்த அந்த மூதாட்டி அலறி கூச்சலிட்டார். நான் வழியில் எங்கும் நிறுத்தாமல் ஆப்பூரில் உள்ள தைல மர தோப்பிற்கு கொண்டு சென்றேன். அங்கு யாரும் இல்லாத இடத்தை எனக்கு சதகமாக்கிக் கொண்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்’ என தனது வாக்கு மூலத்தில் கூறினார். பின்னர், அவரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றதில் ஆஜர்ப்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
நாங்குநேரியில் 1 கிலோ தங்கம் கடத்தி வந்த 4 பேர் சிக்கினர்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது
நெய்வேலியில் பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் ஊழியர்களை கட்டி போட்டு ரூ.20 கோடி நகைகள் கொள்ளை
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!