கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
2022-06-30@ 02:59:53

காஞ்சிபுரம்: கல்லூரி கனவு என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவ, மாணவியர்க்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் பூந்தண்டலம் ஊராட்சி, தனியார் பொறியியல் கல்லூரியில் “கல்லூரி கனவு” என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021 - 2022ம் கல்வியாண்டில், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு, 12ம் வகுப்பு முடித்த பிறகு, ‘நான் முதல்வன்’ உயர்கல்வி பயில்வதற்கான ‘கல்லூரி கனவு’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி பல்வேறு துறை சார்ந்த உயர்கல்வி தொடர்பான விவரங்கள் மற்றும் விளக்கங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தைச் சார்ந்த வல்லுநர்களை கொண்டு நேற்று தாம்பரம், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 2021 - 2022ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பயின்ற சுமார் 1,500 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தைச்சார்ந்த 8 துறை வல்லுநர்கள் மூலம் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்.கோ.சிவ ருத்ரய்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் நடராஜன், பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நாட்றம்பள்ளி அருகே சாலையில் அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த சம்பவம்: பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவில் முன்னோடி தமிழகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழக இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக நிர்வாகி கைது
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!