சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, சவரன் ரூ.37,864-க்கு விற்பனை
2022-06-29@ 10:30:22

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் ரூ.38,080-க்கு விற்பனையானது. இது வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,160 ஆக அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், நேற்று முந்தைய தினம் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,775 க்கும், ஒரு சவரன் ரூ. 38,200-க்கும் விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 25-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,755-க்கும், ஒரு சவரன் 38,040-க்கும், 26-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,755-க்கும், ஒரு சவரன் 38,040-க்கு விற்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றைய தினமான 28-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அதாவது ஒரு கிராம் ரூ.4,765-க்கும், ஒரு சவரன் ரூ. 38,120-க்கும் விற்பனையானது. ஆனால், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 256- ரூபாய் குறைந்து, மக்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சவரனுக்கு ரூ.37,864-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து, ரூ.4,733-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.65.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300-க்கும் விற்கபட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்ந்து சரியும் தங்க விலை... நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!! சவரன் ரூ.88 குறைவு!!
பங்குச்சந்தை அபாரம் சென்செக்ஸ் 60,000ஐ தாண்டியது
சரிவுடன் தொடங்கிய தங்க விலை... சென்னையில் சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்தது
மக்களே தங்கம் வாங்க சரியான நேரம்...சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120-க்கு விற்பனை
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!