மாதவரத்தில் 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
2022-06-28@ 14:29:55

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 27வது வார்டில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல காலமாக ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல் கட்டமாக பெரியசேக்காடு பகுதியில் வருவாய்த்துறை சார்பில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்களின் நில ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா 30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி பெரியசேக்காடு பகுதியில் நேற்று நடைபெற்றது. மண்டலக்குழு தலைவர் நந்தகோபால் தலைமை வகித்தார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு 30 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் சந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!
ஆவடி தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல்காந்தி: முன்னேற்பாடுகள் குறித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை
மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...