SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

2022-06-28@ 12:36:16

வந்தவாசி : கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு, மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியதால் வாலிபரை கழுத்தறுத்து கொலை செய்தோம் என கைதான 3 ேபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் நாகமணி(28), அஜீத்(25), விஜய்(21). ஏழுமலை மளிகைக்கடை நடத்தி வருவதாக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். வழக்கமாக கடையை மூடிக்கொண்டு வரும் விஜய், கடந்த 12ம் தேதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்ச்சியடைந்த அவரது தந்தை ஏழுமலை தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன்  வழக்குப்பதிவு செய்தார். மேலும், விஜய் மாயமானது குறித்து, டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்.ெதாடர்ந்து, விஜய்யின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தி, கடைசியாக அவருக்கு அழைப்பு வந்த எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் கோயில் பின்புறம் பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.

அங்கு, மாயமான விஜய்யின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கை பாகம் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரது பைக் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஏடிஎஸ்பி ராஜா காளீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், யாரோ மர்ம நபர்கள் விஜய்யின் தலையை துண்டித்து கொலை செய்ததும், அவரது சடலத்தை எரித்து தடயங்களை அழிக்க முயன்றதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சு.காட்டேரி பகுதியில் டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, தெள்ளார்  இன்ஸ்பெக்டர் சோனியா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கரீம் பாட்ஷா மகன் மொய்தீன்(31), லோடு ஆட்டோ டிரைவர். நல்லூர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி(31), அவரது உறவினர்   வரதன்(41) என்பதும், மாயமான வாலிபர் விஜய்யை கொலை செய்து எரித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.இந்நிலையில், கொலையான விஜய்யிடம், மொய்தீன் ₹1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் ₹40 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையை தரவில்லையாம். எனவே, விஜய் மீத தொகை கேட்டு மொய்தீனிடம் தகராறு செய்து, அவரது மனைவி குறித்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மொய்தீன் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதேபோல், விஜய் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட அதே கிராமத்தை சேர்ந்த வரதன், நாராயணசாமி ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார். அதன்படி, கடந்த 12ம் தேதி சம்பவத்தன்று மொய்தீன் விஜய்யிடம் பேசி ராமசமுத்திரம் கிராமம் வரும்படி அழைத்துள்ளார். பின்னர், 4 பேரும் சேர்ந்து எஸ்.நாவல்பாக்கம் கிராமம்  முருகர் கோயில் பின்புறம் உள்ள இடத்தில்   மது அருந்தியுள்ளனர்.

தொடர்ந்து, 3 பேரும் சேர்ந்து விஜய்யின் கழுத்தை அறுத்து கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.  இவ்வாறு கைதான 3 பேரும் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.இந்நிலையில், போலீசார் கைதான 3 பேரையும் வந்தவாசி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • vice-ele-6

  குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

 • cong-protest-5

  விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

 • school-girls-isro-5

  இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 • america_nancy

  சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

 • icelanddd111

  ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்