ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடையை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
2022-06-28@ 12:33:03

சென்னை: ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடை மற்றும் பணிக்காலத்தில் இறந்த திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.6.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காலஞ்சென்ற திருக்கோயில் பணியாளர் ஒருவரின் வாரிசுதாரர் ஆகியோருக்கு ரூ.2,70,09,752/- பணிக்கொடை வழங்கிடும் அடையாளமாக 12 ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பணிக்கொடையும், மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், வல்லக்கோட்டை-அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் மாமல்லபுரம்-ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்த 3 திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதியாக தலா 3 இலட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர்
பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், ஆகியோரும், காணொலிக் காட்சியின் வாயிலாக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு...
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு?
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திரையரங்குகளில் வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!: பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
முதலமைச்சர் உத்தரவு!: அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு ஆக.22ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய முடிவு..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!