மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து... 8 பேர் உயிருடன் மீட்பு.. ஒருவர் பலி... 11 பேர் காயம்
2022-06-28@ 10:07:53

மும்பை : மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லா பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனே மீட்புப் பணியை தொடங்கினர்.இதுவரை 8 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஒருவர் இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.11 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2 தீயணைப்பு வாகனங்கள், 2 மீட்பு வாகனங்களில் இருந்து வந்த வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் சில வீடுகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு குடியிருப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு 6 ஆண்டுகளுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்ற அந்த மாநில முதல்வர் ஆதித்ய தாக்கரே ஆய்வு நடத்தினார்.
மேலும் செய்திகள்
பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி
ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்
75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்
கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
ரக்ஷா பந்தன் பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!