மலேசியா ஓபன் பேட்மின்டன் இன்று ஆரம்பம்
2022-06-28@ 00:41:26

கோலாலம்பூர்: ஸ்ரீகாந்த், சிந்து உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்கும் பெட்ரோனாஸ் மலேசியா ஓபன் போட்மின்டன் போட்டி இன்று கோலாலம்பூரில் தொடங்குகிறது. ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும் இந்தப்போட்டியில் சீனா, ஜப்பான், சீன தைபே, தாய்லாந்து, டென்மார்க், இந்தோனேசியா, மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேகின்றனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், கிடாம்பி காந்த், சமீர் வர்மா, லக்ஷயா சென் ஆகியோரும், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும் விளையாட உள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணையும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை, ஹரிதா-அஷ்னா இணை, அஷ்வினி பட்-ஷிகா இணையும் பங்கேற்கும். மற்றொரு இந்திய வீராங்கனை வித்யா, மலேசிய வீராங்னை இஷிகா உடன் இரட்டையர் பிரிவில் விளையாடுவார். கலப்பு இரட்டையர் பிரிவில் வெங்கட் கவுரவ்-ஜூஹி, சுமீத்-அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் களமிறங்க உள்ளனர். தாமஸ், ஊபர் கோப்பைகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அசத்திய பிறகு பேட்மின்டன் போட்டிகள் மீது நாட்டில் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டொரன்டோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சானியா இணை: ஜெசிகா, சிமோனா முன்னேற்றம்
சில்லி பாய்ன்ட்...
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து தொடர் வெற்றி
இந்தியாவை எதிர்கொள்ள தயார்: ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவிட் சிறப்பு பேட்டி
உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை; ஸ்வியாடெக்கை விரட்டும் தோல்வி: மிரட்டிய ஹடாத் மியா
சர்வதேச கேரம் போட்டி: எல்லா தங்கங்களையும் வென்ற தமிழக வீரர்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!