SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணப்பாறை நீதிமன்றத்தில் தொந்தரவு கொடுத்து வந்த குரங்குகள் கூண்டில் சிக்கின-பணியாளர்கள், பொதுமக்கள் நிம்மதி

2022-06-27@ 14:36:57

துவரங்குறிச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கும், நீதிமன்ற பணிகளுக்கும் தொந்தரவு அளித்து வந்த குரங்குகள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.மணப்பாறை-குளித்தலை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நீதிமன்ற வளாகத்தில் புகுந்த குரங்கு கூட்டம் ஒன்று, நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கும், நீதிமன்ற பணிகளுக்கும் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்துள்ளது.

வழக்காடும் மன்றம் வரை குரங்கு நடமாட்டம் அதிகரித்த நிலையில், மாவட்ட வன அலுவலர் கிரைன் மணப்பாறை வனச்சரகத்திற்கு குரங்குகளை பிடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வனச்சரகர் மகேஸ்வரன் தலைமையில் வனவர் செல்வேந்திரன், விராலிமலையிலிருந்து குரங்குகளை கூண்டு அமைத்த்து பிடிக்கும் சக்தி நீதிமன்றத்திற்கு வரவழைத்து இரு நாட்கள் கூண்டு அமைத்து குரங்குகளுக்காக காத்திருந்தனர்.இந்நிலையில் நேற்று மாலை 4 குரங்குகள் 5 குட்டிகள் என 9 குரங்குகள் பொறியில் சிக்கி கூண்டில் அடைப்பட்டது. கூண்டில் சிக்கிய 9 குரங்குகளையும் பொய்கைமலை வனப்பகுதி கொண்டு சென்று விடப்பட்டது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்