SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹7 கோடியில் 6 கோயில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யும் பணிகள் தீவிரம்-இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தகவல்

2022-06-27@ 14:33:18

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் சிதிலமடைந்து உள்ள 6 கோயில்களை ₹7 கோடி மதிப்பில் இந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களை புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திருப்பத்தூர் இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் அண்ணாமலை கூறியதாவது:

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் நாள்தோறும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக பசலிகுட்டை முருகன் கோயிலிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த காரணத்தினால் அதனை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கோயிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

தற்போது ஆடி மாதம் 18ம் தேதி இந்த கோயிலில் பிரசித்திபெற்ற திருவிழா நடைபெற இருப்பதால் திருவிழா முடிந்த பின்பு அறங்காவலர்கள் உருவாக்கப்பட்டு அதன்பின்னர் பசலிகுட்டை சுப்பிரமணியசுவாமி கோயில் திருப்பணி நடைபெறும். தற்போது அதற்காக ₹50 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் திருப்பத்தூர் நகரில் உள்ள காமாட்சியம்மன் கோயிலுக்கு ₹1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உபயதாரர்கள் மூலம் அந்த பணி விரைவில் நடைபெற உள்ளது. அதேபோல் கொரட்டி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் ₹1 கோடி மதிப்பில் புனரமைத்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முத்துக்குமாரசாமி கோயில் ₹10 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் பேராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ₹30 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது. நாட்றம்பள்ளி அருகே உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் புனரமைக்க ₹1 கோடி திட்ட மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.விஷமங்கலம் அருகே உள்ள மங்குண்டமலை சென்னகேசவ பெருமாள் கோயிலுக்கு ₹1 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அதற்கான மதிப்பீடு சென்னை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் மடவாளம் அங்கநாத ஈஸ்வரர் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த கோயில்கள் அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிவடைந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறும். முதற்கட்டமாக ₹7 கோடியில் 6 கோயில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விரைவில் அனைத்துக் கோயில்களும் புனரமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிதிலமடைந்த கோயில்கள் கணக்கெடுப்பு

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அண்ணாமலை மேலும் கூறுகையில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில்  எந்தெந்த கோயில்கள் சிதிலமடைந்து உள்ளது என்று கணக்கெடுப்பு பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட ஸ்தபதி உள்ளிட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். தொல்லியல்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என்றும் தற்போது ஆய்வுப் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த கோயில்களும் சீரமைக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்