சிறுவன் தண்ணீர் குடித்ததில் தகராறு இருபிரிவினர் பயங்கர மோதல்-விஜயநகரம் மாவட்டத்தில் பரபரப்பு
2022-06-27@ 14:28:56

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் சிறுவன் தண்ணீர் குடித்த தகராறில் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் நெல்லிமர்லா மண்டலம் மால்யடா கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பிற்படுத்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆழ்துளை குழாயில் தண்ணீர் குடித்ததால் சிறுவனை தாக்கியதாகவும், அதனால் பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும் இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
மலையடா கிராமத்தில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்ட இந்த மோதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சமீபத்தில் நடந்த கலப்பு திருமணமும் இந்த மோதலுக்கு ஒரு காரணம் என்றும், தசரா பண்டிகையின் போது, பழைய பகையை மனதில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க கிராமத்தில் அமைதியை கொண்டுவர போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போலீசார் அதிகளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
2 தடுப்பூசி போட்டவர்களுக்கு ‘கோர்பிவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்: ஒன்றிய அரசு அனுமதி
தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது ஒன்றிய அரசு...
விற்பனையாகாததால் வேதனை சாலையில் டன் கணக்கில் தக்காளியை வீசிய விவசாயிகள்
75 வயது மாஜி ராணுவ வீரரின் 70 வயது மனைவிக்கு 54 ஆண்டுக்கு பின் ஆண் குழந்தை பிறந்தது: ராஜஸ்தானில் அதிசயம்
சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம்: கேரள அரசு அறிவிப்பு
காஷ்மீர் நடிகையை கொன்ற 3 தீவிரவாதிகள் சிக்கினர்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!