தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
2022-06-27@ 10:52:50

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்கள் துறை, தமிழ்நாடு சிட்கோ மூலம் 5 மாவட்டங்களில் ரூ.173 கோடி திட்ட மதிப்பில் 654 தொழில் மனைகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தண்டரையில் பொது வசதி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூர் பகுதி 2ல் 68 ஏக்கரிலான புதிய தொழிற்பேட்டையின் மூலம் 190 தொழில் முனைவோர்கள் பயன்பெற்று 6000 நபர்கள் வேலை வாய்ப்பினை பெறுவர். திருவண்ணாமலை மாவட்டம், பெரியகோளப்பாடியில் 57 ஏக்கரிலான புதிய தொழிற்பேட்டையின் மூலம் 170 தொழில் முனைவோர்கள் பயன்பெற்று 5800 நபர்கள் வேலை வாய்ப்பினை பெறுவர். சேலம் மாவட்டம் பெரியசீரகபாடியில், 57 ஏக்கரிலான புதிய தொழிற்பேட்டையின் மூலம் 80 தொழில் முனைவோர்கள் பயன்பெற்று 3000 நபர்கள் வேலை வாய்ப்பினை பெறுவர்.
நாமக்கல் மாவட்டம், ராசாம்பாளையத்தில் 37 ஏக்கரிலான புதிய தொழிற்பேட்டையின் மூலம் 100 தொழில் முனைவோர்கள் பயன்பெற்று 3700 நபர்கள் வேலை வாய்ப்பினை பெறுவர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் 37 ஏக்கரிலான புதிய தொழிற்பேட்டையின் மூலம் 100 தொழில் முனைவோர்கள் பயன்பெற்று 3700 நபர்கள் வேலை வாய்ப்பினை பெறுவர். திருவண்ணாமலை தண்டரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் கட்டப்பட்ட 2.22 கோடி மதிப்பில் பொதுவசதி கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், தண்டரை ஒருங்கிணைந்த தொழிற்நுட்ப ஜவுளி பூங்காவில் ரூ.2.22 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொதுவசதி கட்டிடத்தின் மூலம் வங்கி, உணவகம், மருந்தகம் மற்றும் கூட்டு அரங்கம் ஆகிய வசதிகளை தொழிற்பூங்காவின் உறுப்பினர்கள் பெறுவர். தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
மேலும் செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
மாமல்லபுரத்தில் பட்டம் விடும் விழா தொடங்கியது: இன்று முதல் 3 நாட்களுக்கு விழா நடைபெற உள்ளது...
தேவையில்லாமல் அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
வில்லிவாக்கத்தில் கலைஞரின் நினைவு தின பொதுக்கூட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு
ஒரேயொரு பட்டப்படிப்புடன் மாணவர்கள் நிறுத்தக்கூடாது.! கல்வி, மருத்துவ படிப்புகளுக்காக பல திட்டம் செயல்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சுக்குபாய் பிரியாணி உணவகம் அரங்கு அமைக்க முன்வந்ததை அடுத்து சென்னை தீவு திடல் உணவுத்திருவிழாவுக்கு பீப் பிரியாணிக்கு அனுமதி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!