இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரம் கடற்கரையில் மயங்கிய நிலையில் கணவன், மனைவி தஞ்சம்..!!
2022-06-27@ 09:57:12

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து அகதிகளாக 2 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் வயதான கணவன், மனைவி ஆகியோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையில் புதிய அரசு அமைக்கப்பட்டு பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் இன்னும் போதுமான நிதியுதவியை பெற முடியாமல் தொடர்ந்து நெருக்கடியான சூழ்நிலையிலேயே தவித்து வருகிறது.
எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இலங்கை திரிவோணமலையை சேர்ந்த வயதான தம்பதியினர் அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் படகோட்டி பாதி கடலில் இறக்கி விட்டுள்ளார்.
தொடர்ந்து இருவரும் நடந்து கரை சேரும் போது வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் மயக்க நிலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடும் குளிரில் வந்ததால் மயங்கிய நிலையில் இருந்த வயதான கணவன், மனைவியை கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்டு முதலுதவி அளித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஏற்கனவே 90 பேர் தமிழகம் வந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் வந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனியை வீசி பாஜகவினர் அராஜகம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி ஊர்வலம்: இறுதிச்சடங்களுக்குப் பிறகு சொந்த ஊரில் உடல் அடக்கம்...
ஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று மதுரை வந்தடையும்...அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!
செய்யூர் அருகே அதிமுக தலைவரின் மகனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் திடீர் சாலை மறியல்
திருத்தணி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி; பயணிகள் கோரிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!