பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
2022-06-27@ 09:47:19

சென்னை : முந்தைய அரசின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமம்தான், பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு பிறந்த பழங்குடியின மலைக் கிராமம். உபர்பேடாவில் பதசாகி, துங்கிரிசாகி என்ற 2 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் பதசாகி கிராமத்தில் முழுமையாக மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. துங்கிரிசாகியில் மின்சாரம் கிடையாது. .இந்தநிலையில், பாஜ.வின் ஜனாதிபதி வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டதும், அவருடைய வெற்றியும் உறுதியாகி இருப்பதால், துங்கிரிசாகி கிராமம் முழுவதற்கும் மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான பணியை ஒடிசா அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இதற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான சிமென்ட் கம்பங்கள், மின்சார கேபிள்கள், டிரான்ஸ்பார்கள் மலைக்கு தூக்கி செல்லப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஜனாதிபதி வேட்பாளர் முர்முவின் கிராமத்திற்கு மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.திரெளபதி முர்முவின் கிராமம் மட்டுமல்ல இந்தியாவின் பல கிராமங்களுக்கு மின்சாரம் சென்று சேரவில்லை.பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.கடந்த 75 ஆண்டுகளுக்காக இந்தியா அடைந்த வளர்ச்சி பெருமைப்பட கூடிய ஒன்று. இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடையும். இதற்கு முன்னாள் இருந்த அரசுகள் செய்தவற்றின் தொடர்ச்சியாக தான் பாஜக அரசு செய்து வருகிறது.முந்தைய அரசின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும்,'என்றார்.
மேலும் செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
ஷோ ரூமில் இருந்து ஓட்டி பார்ப்பதாக ஜீப்பை எடுத்துச் சென்ற நபர் எஸ்கேப்: “வடிவேலு காமெடி நிஜமானது’’
எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவச் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.!
மன்னார்குடி வேணுகோபாலசுவாமி கோயிலில் 50 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட 13ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டுபிடிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை போக்குவரத்து மாற்றம்
மூவண்ணக் கொடியைப் போற்றுவோம்.! மூட அரசியல்தனத்தை அடக்குவோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!