SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் குவித்து வைக்கப்படும் கட்டிட மற்றும் மரக்கழிவுகள்: கொசு உற்பத்தி அதிகரிப்பு

2022-06-27@ 07:27:41

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர், கட்டிட மற்றும் மர கழிவுகளை சாலையில் குவித்து வைத்துள்ளதால், கொசு உற்பத்தி மற்றும் துர்நாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 70 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சியில் 32வது வார்டு உறுப்பினர் வசந்தகுமாரி கமலகண்ணன் மேயராகவும், 30வது வார்டு உறுப்பினர் கோ.காமராஜ் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 1வது மண்டலத்தில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 29, 31 ஆகிய 13 வார்டுகளும், 2வது மண்டலத்தில் 9, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 24, 26, 27, 28 ஆகிய 14 வார்டுகளும், 3வது மண்டலத்தில் 22, 23, 25, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 ஆகிய 14 வார்டுகளும், 4வது மண்டலத்தில் 33, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61 ஆகிய 14 வார்டுகளும், 5வது மண்டலத்தில் 45, 46, 47, 48, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 ஆகிய 13 வார்டுகளும் உள்ளன.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பெரும்பாலான தெருக்களில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் நடைபெறும் கட்டிட பணிகள் முடிவடைந்த பின்னரும், சம்மந்தப்பட்டவர்கள் அந்த கட்டிட கழிவுகளை அகற்றாமல், சாலை ஓரமாகவே கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். அவ்வாறு கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகளின் மீது பொதுமக்கள் குப்பை கழிவுகளை தொடர்ந்து கொட்டிவருவதால் தெருக்கள் முழுவதும் குப்பை மலை போல் குவிந்துள்ளது. அதேபோல், பெரும்பாலான பகுதிகளில் மரக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தாம்பரம், முல்லை நகர், கஸ்தூரிபா நகர், சுந்தரம்  காலனி, கல்யாணசுந்தரம் தெரு, அண்ணா தெரு, கடப்பேரி, சானடோரியம், ஜட்ஜ்  காலனி, சிட்லபாக்கம், குரோம்பேட்டை, சேலையூர், கணபதிபுரம், இரும்புலியூர்  என பல்வேறு பகுதிகளில் கட்டிட மற்றும் மர கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர் நடவடிக்கை எடுக்காததால் அவ்வப்போது பெய்துவரும் மழையினால் ஆங்காங்கே உள்ள கட்டிட கழிவுகள் மற்றும் மரக் கழிவுகளில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதோடு மட்டுமின்றி கட்டிட கழிவுகளில் உள்ள மண் தூசிகள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால் அவர்கள் நிலைதடுமாறி விபத்து ஏற்படுவது மட்டுமின்றி, அருகில் உள்ள குடியிருப்புகளில் படிவதுடன், மூச்சுத்திணறலால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில் சிலர் கட்டிடக்கழிவுகளை மழைநீர் கால்வாய் மேல் கொட்டி வைப்பதால் அந்த கழிவுகள் கால்வாயின் உள்ளே விழுந்து அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து வீடுகளில் நுழைவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்கு  உட்பட்ட ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது 2 கட்டிட வேலைகள் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் கட்டிட வேலைகளின்போது அந்த கட்டிட கழிவுகளை சாலையோரம் குவித்து வைக்கின்றனர். பின்னர் பணிகள் முடிக்கப்பட்ட பின்னரும் அந்த கட்டிட கழிவுகளை அகற்றாமல் அங்கேயே விட்டுவிடுகின்றனர். இதுபோல சாலையோரம் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து சம்மந்தப்பட்டவரிகளிடம் சொல்லி கட்டிட கழிவுகளை அகற்றச்சொன்னால், கட்டிட கழிவுகளை அகற்ற எங்களால் முடியாது என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கட்டிட கழிவுகள் மேல் அப்பகுதி பொதுமக்கள் குப்பை கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் கட்டிட கழிவுகள், குப்பை கழிவுகள் ஒன்று சேர்ந்து மலை போல் காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்