செங்கல்பட்டு அருகே முகம் சிதைத்து வாலிபர் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
2022-06-27@ 04:54:34

சென்னை: செங்கல்பட்டு அருகே வல்லம் பேருந்து நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் ஒன்றரை மணியளவில் கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில், ஒரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர், மயங்கி கிடந்த அந்த வாலிபரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை அவ்வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து, தீவிரஅந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.
அதில் சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்காவனம் மகன் அர்ஜூன் (30) என்பதும், இவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்ததும், சம்பவத்தன்று, மர்ம கும்பல் ஒன்று இவரை சவாரிக்காக அழைத்துச்சென்று, வல்லம் பேருந்து நிலையம் அருகே, கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, காருடன் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இப்புகாரின்பேரில், தனிப்படை போலீசார் கால் டாக்ஸி டிரைவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் களை கட்டுகிறது உணவுத் திருவிழா: இறுதிநாள் என்பதால் பொதுமக்கள் படையெடுப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!
அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை: மேலாளர் உள்ளிட்ட 20 நபர்களிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை
அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி: அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றி ஓராண்டு நிறைவு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!