லோக் அதாலத்தில் 5204 வழக்குகளுக்கு தீர்வு
2022-06-27@ 04:51:47

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக நடைபெற்ற லோக் அதாலத்தில் மொத்தம் 5204 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3124 வழக்குகள் முடிக்கப்பட்டு 25 கோடியே 37 லட்சத்து 86 ஆயிரத்து 421 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தாலுகா நீதிமன்றங்களில் நடைபெற்றது.
இதில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகள் மற்றும் வங்கி சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகள், சமரசம் பேசி முடிக்கப்பட்டன. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 4656 வழக்குகள் சமசர தீர்வுக்கு எடுக்கப்பட்டு 2576 வழக்குகள் முடிக்கப்பட்டு 23 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 749 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் நிலுவையில் அல்லாத 548 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு அனைத்து வழக்ககளும் முடிக்கப்பட்டு 2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 672 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. இதனால் மொத்தம் 5204 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3124 வழக்குகள் முடிக்கப்பட்டு 25 கோடியே 37 லட்சத்து 86 ஆயிரத்து 421 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவள்ளூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.செல்வசுந்தரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கணபதி சாமி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் நிரந்தர லோக் அதாலத் தலைவர் கோ.சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேலாராஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பி.வி.சாண்டில்யந், சார்பு நீதிமன்ற நீதிபதி சுதாராணி, மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை, சத்தியநாராயணன், செல்வ அரசி , பவித்ரா மற்றும் வழக்கறிஞர்கள், வங்கி அலுவலர்கள், வழக்கறிஞர்கள் தொடுகாடு நாகராஜ், டி.சீனிவாசன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.15.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி எஸ்தாக். இவரது மனைவி தங்கராணி. இவர்களுக்கு ஜேசு எஸ்தார் மதன், ஆரோக்கிய நித்யா, வினோத் ராஜ் என்ற 3 பிள்ளைகளும் உள்ளனர். மளிகை கடை நடத்தி வரும் இவர்கள் கடந்த 2020 மே மாதம் 20ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திருவள்ளூர் அடுத்த வடமங்கலம் என்ற பகுதியில் சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் தங்கராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி எஸ்தாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்த வழக்கில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வசுந்தரி விபத்தில் உயிரிழந்த தங்கராணியின் குடும்பத்தினருக்கு விபித்துக் காப்பீடு திட்டத்தின் கீழ் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியினர் ரூ.15.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தங்கராணியின் பிள்ளைகளான 3 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடிய முன்னாள் அரசு வழக்கறிஞர் நாகராஜ் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சென்னையில் களை கட்டுகிறது உணவுத் திருவிழா: இறுதிநாள் என்பதால் பொதுமக்கள் படையெடுப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.252 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு!
அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை: மேலாளர் உள்ளிட்ட 20 நபர்களிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை
அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வருக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி: அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றி ஓராண்டு நிறைவு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!