கள்ளக்காதலுக்கு இடையூறு குழந்தையின் கையை உடைத்த தாய் கைது
2022-06-27@ 02:29:09

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை சிமென்ட் ரோட்டை சேர்ந்தவர் கபிலன். இவரது மனைவி தமிழரசி (21). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. இவர்களுக்கு ஜனனி என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த 2 மாதத்தில் கபிலன் பிரிந்து சென்றுவிட்டார். குழந்தையுடன் தமிழரசி தனியாக வசித்த வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். சிவா வீட்டிற்கு வந்து போகும் போது குழந்தை இடையூறாக இருப்பதால் பலமுறை குழந்தையை தாக்கி அடித்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையை தாக்கியதில் குழந்தையின் கை உடைந்துள்ளது. அதை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த காருண்யா தேவி (41), வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசியை கைது செய்து நடத்திய விசாரணையில், குழந்தையை தாக்கி கையை உடைத்தது உண்மை என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வடிவேலு பட பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி ஜீப் அபேஸ்
சின்னசேலம் பள்ளி கலவரத்தில் மாடுகளை திருடிய 3 பேர் கைது
திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸ் வாகனம் மீது தாக்குதல்
கடலூர் பாடலீஸ்வரர் கோயிலின் கோபுர உச்சியில் அனுமதியின்றி தேசியகொடி ஏற்றிய பாஜவினர்
பாரத மாதா கோயில் பூட்டை உடைத்த விவகாரம் பாஜ துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது
ஆசாரிபள்ளத்தில் கஞ்சா விற்பனை வாலிபர்கள் மற்றும் தாயாரின் 4 வங்கி கணக்குகள் முடக்கம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!