வேலியே பயிரை மேய்ந்த அவலம்.. பெண் காவலரை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ்காரர்
2022-06-26@ 17:48:58

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில், பெண் காவலரை சக போலீஸ்காரரே பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிடிட்டியுள்ளார். பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர, பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, அந்நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன.
கடந்த 6 ஆண்டுகளில் (2015-21) இதுபோன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பெண் கான்ஸ்டபிளை சக கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது. மதியாரி நகருக்கு அருகே உள்ள ஹலா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விவரம்: சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட நபருக்கு எதிரான விசாரணை பற்றிய பணிக்காக தனது அரசு இல்லத்திற்கு வரும்படி ஆண் கான்ஸ்டபிள், சக பணியாளரான பெண் கான்ஸ்டபிளை அழைத்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற பெண் கான்ஸ்டபிளிடம் குடிப்பதற்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்து உள்ளார். தேநீரில் மயக்க மருந்து கலக்கப்பட்டு உள்ளது.
இதனால், தேநீரை வாங்கி குடித்த அந்த பெண் கான்ஸ்டபிள் மயக்கமடைந்து உள்ளார். இதன்பின்னர், அவரை ஆண் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை பல வீடியோக்களாகவும் எடுத்து வைத்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண் கான்ஸ்டபிள் அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார். இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பியதுடன், தன்னை மிரட்டியும் வருகிறார் என தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து யூசுப் பிலால் என்ற அந்த ஆண் கான்ஸ்டபிளை ஹலா போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
புதிய மின்சார சட்ட திருத்த மசோதா விவசாயிகளை பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை: ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கம்
இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 7 மாதத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரிகள் தகவல்
சென்னை நீர் நிலைகள் தொடர்பான வழக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நில மோசடி வழக்கில் ஆக. 22 வரை சஞ்சய் ராவத் சிறையிலடைப்பு: மும்பை நீதிமன்றம் உத்தரவு
மின்சார சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பிவைப்பு
நிலக்கரி முறைகேடு வழக்கு.: முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!