ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
2022-06-26@ 14:26:14

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழகம், கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.
நேற்று மாலை ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் தனது குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று இருந்த வாகனங்களின் நடுவே காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன.
காட்டு யானைகளை கண்டு அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தினர். திடீரென வாகனங்களை காட்டு யானைகள் துரத்த தொடங்கியதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக வாகனங்களை திருப்ப முயற்சித்தனர்.
அப்போது ஒரு வெள்ளை நிற காரை கண்டு அச்சம் அடைந்த காட்டு யானைகள் திடீரென காரை தும்பிக்கையால் தாக்கத் தொடங்கின. அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய ஒரு நபர் அச்சத்துடன் தப்பியோடினார். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானைகள் திடீரென காரை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
மதுரை ஆதீனத்தில் இருந்து தம்பிரான் திடீர் விலகல்: திருவாரூரில் பரபரப்பு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
சிறுமி கருமுட்டை விற்பனை சேலம் மருத்துவமனைக்கு சீல்
வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு தடை விதித்தது சரிதான்: கலெக்டர் உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!